அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 18 May 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow குஞ்சரம் arrow வாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கண்ணன் - பிரதீசன்  
Monday, 25 June 2007

01.

சென்ற கோடைவிடுமுறை இலண்டன் மாநகர வலமாக அமைந்தது.  நீண்ட இடைவெளியின் பின்னான சந்திப்புகளும் உறவாடல்களும்  சுற்றுலாக்களுமாக நாட்கள் கழிந்தன.
இலண்டன் மாநகருக்குள் வாகனத்தில் செல்வது இரவில் மட்டும்  சாத்தியமாகவுள்ளதை பல நட்புகள் தெரிவிதிருந்தமை என்னை  ஆச்சரியமூட்டியது.
வீதி ஒழுங்குக் கெடுபிடிகளும், கமெராக்களும் நம்மவருக்கு  நிறையவே பட்டறிவைக் கொடுத்திருந்தன.
இதில் கணிசமான தாக்கத்தைக் கொடுத்தது தானியங்கிக்  கமெராக்களின் ஆளுகைதான்.
இதனால் ஓட்டுநர் அனுமதி மதிப்பின் சுட்டெண் அளவை  நம்மவர்களில் பலர் அதிகமாக இழந்திருந்ததை அறிய ஆச்சரியமாக  இருந்தது.
அந்த அளவை எண் 3 மட்டும் கொண்ட துடிப்பான நண்பனுடன்  உரையாடியவாறு பக்கத்து இருக்கையில் சென்ற என்னால்  சாதாரணமாக இருக்க முடியவில்லை.
ஐரோப்பிய தேசத்தில் வாகனமில்லாது வேலைகளைத்  தொடருவதென்பது இலேசானதொன்றல்ல என்பதால் அவனது  தயக்கமில்லாத வாகனமோட்டும் போக்கு மேலும் எனக்கு  ஆச்சரியத்தைக் கொடுத்தது.
-'மச்சான் நிதானமாகப் போவன்' - சிறிய தயக்கத்துடன், என்னையும்  அறியாமல்....
-'ஏன்? உங்கட பாரீசென்று நினைக்கிறீயா? இது இந்கிலீசு நாடு'-
-'இல்லையப்பா இனி இழக்க ஒன்றுமில்லையே அதுதான்!'- (அதாவது  ஓட்டுநர் மதிப்பெண்ணில் இழப்பதற்கு இதன்மேல் என்ன இருக்கு!)
-'போடா பயந்தாங்கொள்ளி! கடன் மாற்றீடாக்கினால் போயிடும்!'-
-'ஆஆ கடனா?' - ஆச்சரித்தை எனது வாய் தெளிவாகவே  வெளிப்படுத்தியது.
-'ஓம் மச்சான், கடனாக அல்லது கைமாற்றாக இதை  ஈடுசெய்வதுதானே இதுக்குப் போய் அலட்டிக் கொண்டு!'-
-'அதுதான் எப்படியெண்டு சொல்லன்?'-
-'இதொன்றும் வங்கிகளில் பெறும் விவகாரமில்லையப்பா. இப்ப  உன்னட்ட இந்த மதிப்பெண் 12 இருக்குத்தானே, இதிலிருந்து  கடனாகப் பெறுவதுதானே. அதாவது நீதான் இந்த வாகனத்தை  ஓட்டினதாகப் பதிந்தால் போதும் இதுதான் கடன்'-
புத்தம்புதிய அனுபவ அறிவை பகிர்ந்த அவனைத் திரும்பி உற்றுப்  பார்க்கிறேன்.

-கண்ணன் (இலண்டன்)

 

 

02.
புதிய உறவினன் ஒருவன் கனடாவிலிருந்து பாரீசு வந்திருந்தான்.  முதல்வருகைக்கு எப்போதுமே தனி மவுசுதானே!
முகமறியாத உறவினைக்காண அவர் தங்கியிருந்த வீட்டுக்குச்  செல்கிறேன்.
கிழக்கு மாகாண வழிவந்த உறவுகளின் விருந்தோம்பல் அன்பு  என்னைக் கிறங்கடிக்க செய்யும்.
வாசலிலேயே அந்த உறவு என்னை வரவேற்றது உடனடியாகவே  சரளமாக உரையாடலைத் தொடங்க வைத்தது.
நல்ல துருதுருப்பான இளைஞன். இந்தியா சென்று திருமணம் செய்த  வழியில் தமக்கை குடும்பத்தைப் பார்க்க பாரீசு வந்துள்ளார்.
திக்குத் திக்காகப் பிளவுற்ற குடும்பங்கள் இப்படியான  தருணங்களிலாவது சந்திக்காது விட்டால் எப்போ சந்திப்பது?
இயல்பான அவனது சுபாவ ஈர்ப்பால் பல்வேறு விடயங்கள் பற்றிப்  பேச முடிந்தது.
கனடா வாழ்வை அவனது பார்வையில் கேட்க விளைந்தேன்.
அவனது இளமைத் தோற்றத்திற்கேற்பவே வார்த்தை விபரணங்களும்  துடிப்பாக இருந்தன.
ஊர்ச் சங்கங்கள், கோயில்கள், இலவசப் பத்திரிகைகள், மோதல்கள்,  படிப்பு வாய்ப்புகள், அடுக்குத் தொடர் மாடிக் குடியிருப்புகள் எனவாகச் சுழன்று வாகனம் பற்றி வந்தடைந்தது.
- அதிவிரைவு நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஏதாயினும் தவறுகள் செய்தால் பார்த்துக் கொணடிருக்க உலங்கு வானுர்தி வந்து தூக்கிச்  சென்றுவிடும்!
- ஆ!! என்ன இங்கிலீசுப் படத்தில வாற காட்சி மாதிரியல்லா இருக்கு!
எனது சந்தேகத்தை அவன் அலட்சியம் செய்தவாறு தொடர்கிறான்...
- அங்கே காவல்துறை இலேசானதல்ல, நொருக்கிப் போடும்.  சிறைதான்!
- நம்மாக்கள் கனபேர் உள்ளே இருக்கினம்! ஆனால் சிறைத்  தண்டனை நாட்களை தவணை முறையிலும் கழிக்கலாம்.
- என்னது... தவணை முறையிலா? எப்படியப்பா கனடியன்  செய்கிறான்? எனது ஆச்சரியம் மடையுடைத்த வெள்ளமாகிப்  புறப்பட்டதைக் கண்டு புன் முறுவல் கொண்டவனாகித் தொடர்கிறான்.
- இப்ப ஒருவருக்கு மூன்று மாதத்தண்டனை கிடைத்திருக்கு என்று  வைத்துக் கொண்டால், இதனை வாரத்திற்கு இரு நாளாகத் தவணை  முறையில் 45 வாரங்களில் செலுத்திவிடலாம். மற்றைய நாட்களில்  வேலை செய்து வீட்டில் இருக்கலாம்.
இரவு கடந்ததும் தெரியாதவனாகி, பேச்சு மூச்சற்றுக் கேட்டுக்  கொண்டிருக்கிறேன்.
‘வெள்ளைக்காரன் எங்கேயோ போயிற்றான்:’

- பிரதீசன் (பாரீசு)

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
 


மேலும் சில...
கருமி
சமாதானம்?/திருப்பி அனுப்பப்படுதல்!
உணவகக் குசினி
நேரத்திற்கு பதில் மணிக்கூடு
மீண்டும் தட்டிக்கொடுப்பு
மக்களை கைவிட்ட கடவுள்
செம்மொழி என்றால் என்ன சார்?…. இங்க துட்டு கிடைக்குமா சார்?
இலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்!
கிட்டப் பார்த்தால் தெரியாதோ
வீடும் வலியும்
ஊர் சிரிக்குமே!
கடற்புவி அதிர்வும் மானுடரும்!
மடம் வீட்டு வேலை
நச்சுவிதை
கைநாட்டு

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 18 May 2024 07:52
TamilNet
HASH(0x560fe277c208)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 18 May 2024 07:52


புதினம்
Sat, 18 May 2024 07:52
















     இதுவரை:  24904240 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2870 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com