அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 05 May 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 24 arrow தேடல்…
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தேடல்…   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எ.ஜோய்  
Monday, 06 February 2006

ஆழப் புதைந்த
என் நினைவுகள்
உயிர் கொண்டெழும் போது
அந்த மனிதனைத் தேடுகிறேன் …

அழுகிச் சிதைந்த
தசைகளில் வடியும்
ஊனத்தின் மீது
வட்டமிடுகின்றன
எண்ண ஈக்கள் …

இதுவரை பயணிக்காத
சூட்சும வெளிக்குள்
முடுக்கி விடப்பட்ட இயந்திரர்களாய்
சூனியம் கொண்டலைகின்றன
மனிதப் பிணங்கள் …

சாவின் தெருக் கோடியில்
எண்ணிலடங்காப் பைத்தியங்கள்
சண்டையிட்டுக் கொள்கின்றன
கல்லறைகளின் விலைபேசி …

வசந்தம் விரித்துவைத்த
நித்திய கால
இலைகளின் மீது
துயில் கொள்ளும்
பனித்துளியில்
முகம் பார்த்த
அந்த மனிதனைத் தேடுகிறேன் …

அவன் எனக்குள்
இருக்கலாம்
ஆனாலும் அவனுக்குள்
நான் வசிக்கும்
காலத்திற்காய்
என் மீது சவாரி செய்யும்
சவங்களையும்
சுமந்து கொண்டு
அந்த மனிதனைத் தேடுகிறேன் …

20-12-2005


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 05 May 2024 20:13
TamilNet
HASH(0x55ef33df5df8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sun, 05 May 2024 20:13


புதினம்
Sun, 05 May 2024 20:13
















     இதுவரை:  24860847 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3624 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com