அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 6 arrow சூத்திரர் வருகை கவிதைநூல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சூத்திரர் வருகை கவிதைநூல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பாலன்குட்டி  
Tuesday, 01 June 2004

மு.பொ.

தமிழ்க் கவிதைப் போக்கில் தேக்கங்களை உடைத்து, விமர்சனங்களை முன்வைத்து, புதுப் பாய்சலை நிகழ்த்திய. முக்கியமானவர்களில் மு.பொவும் ஒருவராவார்.
அவரது கவிதை நூலான 'சூத்திரர் வருகை" எனும் கவிதை நூலை 'அப்பால் தமிழ்"  பாரிசில் அறிமுகம் செய்தும் வெளியிட்டும் வைத்தது.
10.01.2004 சனிக்கிழமை மாலை பாரிசில் இந்நிகழ்வு இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு திரு. குமாரதாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். "மு.தவின்" நினைவுகளை அடி பெயர்த்து, சமகாலத்தில் எம்முன் பிரசன்னமாகியிருக்கும் "மு.பொவினது" ஆளுமைகள் குறித்தும், அவர்களது தத்து வார்த்த சிந்தனைத் தளங்கள் குறித்தும் அவர் உரை நிகழ்த்தினார்.

ஈழத்து படைப்பாளிகளினது இலக்கியங்களைப் பரவச் செய்வதிலும், அறிமுகம் செய்துவைப்பதிலும் கருத்தோடு இயங்கும் கி.பி.அரவிந்தன் அவர்கள். விமர்சகராகவும், கவிஞருமாக அறியப்பட்டவர். அவரே மு.பொ வினது 'சூத்திரர் வருகை' எனும் கவிதை நூலை அறிமுகம் செய்து வைத்து உரை நிகழ்த்தினார். அதே வேளை மு.பொ என அழைக்கப்படுகின்ற ஈழத்துப் படைப்பாளி பற்றிய அறிமுகத்தையும் அவர் நிகழ்த்த வேண்டியிருந்தது. இந்நிகழ்வில் புங்குடுதீவு மக்கள் பலர் கலந்து கொண்டிருப்பார்கள் என்கிற நோக்கில் அவரது உரை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு பிறிதோர் நிலையே உருவாகியிருந்தது. படைப்பாளிகளும், பத்திரிகையானர்களும், விமர்சகர்களும், கவிஞர்களுமெனக் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏற்கனவே மு.பொ வைப் பற்றி அறிந்தவர்களாகவே இருந்தார்கள். எனினும் அறிமுக உரையில் படைப்பாளியினுடைய ஏனைய படைப்புக்களையும் நிகழ்வில் காண்பித்து பேசியமை பல விடயங்களை தெளிவாக்க உதவியது.
 
புகலிடப்புத்தக (Exilivre.com)  இணையத்தள நடத்துனர் வாசுதேவன் அவர்கள் நூல் வெளியீட்டுரை நிகழ்த்தினார். பிரெஞ்சு இலக்கியங்களுடனான அவரது பரீட்சயம் குறிப்பிடத் தக்கதாக அமைந்திருந்தது.
'சூத்திரர் வருகை " எனும் கவிதை நூலில் உள்ள 'துயரி" எனும் கவிதையொன்றைப் பற்றியே அவரது பேச்சு அமைந்திருந்தது.விரிவும் ஆழமும் கொண்டிறங்கும் தன்மையில் 'துயரி" கவிதைக்குள் பயணம்  செய்தார். ஆத்மார்த்த தளத்திலும் யதார்த்த தளத்திலும் இயங்கும் அந்த நீண்ட பெரும் கவிதை பற்றி அவர் துல்லியமாக பேசினார். அது காட்டும் பரவச நிலைபற்றியும் அது வாசக நிலையில் இருந்து தகர்த்து உயர்த்தும் தளம் பற்றியும் அவர் கோடுகாட்டினார்.
சபையில் கலந்து கொண்டிருந்தவர்கள் கருத்து வழங்கும் நேரத்தில் கலைச் செல்வன் அவர்களும் கலந்து கொண்டு தனது கருத்துக்களை தெரிவித்தார்.
'மு.பொ"  ஏற்புரையின் போது தமிழ் மக்கள் தங்களுடைய அடையாளங்களை இழந்து தொலைந்து போய்விடக்கூடாது  என்பதை வலியுறுத்திக் கூறும் பாங்கில் அவர் தனது உரையைத் தொடங்கினார்.
'ஆபிரகாம் லிங்கனிடம்" செவ்விந்தியத் தலைவர் கூறிய விடையத்தை அடியொற்றிப் பேசினார். அவை எம்முள் பல ஆழமான கேள்விகளை எழுப்பிச் சென்றது.
தா.பாலகணேசன் நன்றியுரை நிகழ்த்தும் போது 'சூத்திரர் வருகை' நு}ல் வெளியீடானது இயல்புப் போக்கில் நிகழ்ந்த நிகழ்வு எனவும். பிரெஞ்சு மண்ணுக்கு மு.பொ போன்ற கவிஞர்களின் வருகை முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.
பல ஆளுமைகளைக் கவிதை இலக்கியப் போக்கில் பகிரவும் தெளியவும் புரியவுமான ஒரு பயணமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 23:10
TamilNet
HASH(0x55aca9eec938)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 23:09


புதினம்
Thu, 28 Mar 2024 23:10
















     இதுவரை:  24714262 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4453 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com